நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கீழேரிப்பட்டியில் வாடகைக்கு தறிப்பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி லீலாவதி. இந்த தம்பதிக்கு கீர்த்திவாசன் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். சீனிவாசன் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவரது மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் உணவருந்திவிட்டு உறங்கச் சென்றனர். மறுநாள் காலை தம்பதியினர் தறிப்பட்டறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த முதற்கட்ட விசாரணையில், சீனிவாசன் கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் தம்பதியினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
திருச்செங்கோடு அருகே கடன் பிரச்சினையால் மனமுடைந்த தறிப்பட்டறை உரிமையாளரும் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த தறிப்பட்டறை உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
