ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. இந்நிலையில், திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். அப்போது வாகனத்தில் வந்த ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தார். இதையடுத்து சிறிது நேரம் தடுப்புச்சுவரில் அங்கும் இங்கும் நடமாடிய சிறுத்தை பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வனப்பகுதியில் சிறுத்தை, புலி நடமாட்டம் காணப்படுவதால், திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும்
திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை உலா வந்தது. இதனை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




