இரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதிகளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்தி உறங்க அனுமதிக்கும் விதியை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் இரயிலில் பயணம் செய்தபோது குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே படுக்கையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த நேரக் கட்டுப்பாட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு, தற்போதைய விதிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது எனத் தெரிவித்தது. மேலும், பகல் நேரங்களில் கீழ் படுக்கையை அனைத்து பயணிகளும் அமர்வதற்கான இருக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், நடுப்படுக்கையை இரவு 10 மணிக்குப் பிறகே திறக்க வேண்டும் என்றும் விளக்கமளித்தது. அதேநேரத்தில், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இரயில் படுக்கை வசதி – உயர்நீதிமன்றம் உத்தரவு
இரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கை வசதியைப் பயன்படுத்தும் விதியை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கை வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கும் விதியை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பகலில் கீழ் படுக்கையை அனைவரும் அமர்வதற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




