தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குற்றாலம் பேரூர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்திற்கு, பேரூர் கழகச் செயலாளர் ஜெய் சாய் குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மத்திய மாவட்டப் பொருளாளர் மாரியப்பன், தென்காசி நகரச் செயலாளர் சங்கர பாண்டியன், தென்காசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வசந்த் சேதுபதி, தென்காசி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உதயகுமார், இலஞ்சி பேரூர் கழகச் செயலாளர் கோபால் மற்றும் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பசும்பொன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குற்றாலம் பேரூர் கழக உறுப்பினர்களான சுரேஷ், நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தவெக வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம் அப்பகுதியில் தவெக கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வெற்றி - குற்றாலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
குற்றாலத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குற்றாலத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
