மதுரை மாவட்டம் சோழவந்தானில் போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபடுவோர், வெளிமாநிலங்களில் இருந்து போலி முகவரிகளைப் பயன்படுத்தி, தங்களது அலைபேசி எண்ணை மட்டும் கொடுத்து தபால் மூலம் மாத்திரைகளை வரவழைகின்றனர். இதையடுத்து, முகவரி தெரியாமல் தபால்காரர்கள் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும்போது, நேரில் வந்து பார்சல்களைப் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், சோழவந்தான் கீழப்பச்சேரி பகுதியில் போலி முகவரியில் தபால் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பார்சல் வந்துள்ளது. அந்தப் பார்சலை வாங்குவதற்காக சமயநல்லூரைச் சேர்ந்த சீனிவாசகண்ணன் மகன் கிஷோர்குமார் வந்துள்ளார். இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பார்சலை வாங்க வந்த கிஷோர்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 900 டேபென்டடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகள் எங்கிருந்து அனுப்பப்பட்டன, கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தபாலில் வந்த 900 போதை மாத்திரைகள் பறிமுதல் - வாலிபர் கைது
போதை மாத்திரைகளை வாங்க வந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 900 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
சோழவந்தானில், தபால் மூலம் அனுப்பப்பட்ட போதை மாத்திரைகளை வாங்க வந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 900 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
