கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் குமார். இவரது மனைவி நிவேத்யா. இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து, குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக நிவேத்யா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாடலிங் மற்றும் தொடர்ந்து படிப்பதற்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக கருதி, அவர்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை நிவேத்யா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நிவேத்யாவை கைது செய்துய்ள்ளனர். மேலும், நிவேத்யாவுக்கும் மார்ட்டின் இக்னேஷியஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவத்தன்று குழந்தைகளை கொலை செய்தபோது, வெளியே யாரும் வருகிறார்களா என மார்ட்டின் கண்காணித்துள்ளார். இதனால் இரட்டை கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மார்ட்டினையும் போலீசார் கைது செய்தனர்.
தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளை கொன்ற தாய், அவரது கள்ளக்காதலன் கைது
கேரளாவில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து இரண்டு குழந்தைகளைக் கொன்ற தாய் நிவேத்யா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் மார்ட்டின் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில், மாடலிங் மற்றும் படிப்புக்கு குழந்தைகள் தடையாக இருப்பதாகக் கருதி, மகள் மற்றும் மகனைக் கொலை செய்த தாய் நிவேத்யா, கொலைக்கு உடந்தையாக இருந்த காதலன் மார்ட்டின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




