சேலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ம், மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை சாலையில் அமைந்துள்ள கடை எண் 7227 மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சௌந்தர்ராஜன். இவர் கடந்த 7 மாதங்களாக கடைக்கு பணிக்கு வராமல், அவ்வப்போது வந்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் கலால் பிரிவு தாசில்தார் 7227 மதுபானக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சௌந்தர்ராஜன் பணிக்கு வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தார் வருகை பதிவேட்டில் சௌந்தர்ராஜன் பெயருக்கு நேரே ஆப்சென்ட் எனப் பதிவு செய்து, இது குறித்து அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுச் சென்றார்.இதையடுத்து, தன் அரசியல் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்திய சௌந்தர்ராஜன், தாசில்தார் ஆப்சென்ட் எனப் போட்ட இடத்திலேயே மீண்டும் தனது கையெழுத்தைப் போட்டுச் சென்றுள்ளார். பின்னர், தன் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, மதுபான மாவட்ட மேலாளர், பிரபாகரன் உதவி மேலாளர் மற்றும் மதுபான அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து முறைகேட்டை மறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், முறைகேடு குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த சூப்பர்வைசர் கோவிந்தனுக்கு இடமாற்றம் உள்ளிட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வருகைப் பதிவேட்டுப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற முறைகேடுகள் மற்ற கடைகளிலும் நடைபெறுகிறதா என்பதைக் கண்டறிய, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தீவிர ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் 7 மாதங்களாக பணிக்கு வராமல் சம்பளம் வாங்கும் மதுபான விற்பனையாளர்
சேலத்தில் 7 மாதங்களாக பணிக்கு வராமல் சம்பளம் வாங்கும் மதுபான விற்பனையாளர் சம்பளம் பெற்றுள்ளார்.
சேலம் மதுபானக் கடையில் முறைகேடு குறித்து புகார் அளித்த சூப்பர்வைசருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருகைப் பதிவேட்டுப் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




