சேலம் மாவட்டம் சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு புதிய பேருந்து நிலையம் அருகே சொந்தமாக வெள்ளிப் பட்டறை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வெள்ளி பட்டறையில் 550 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்ட பல வெள்ளி பொருட்களை இரவு நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியைத் தாக்கிக் கட்டிப்போட்டுவிட்டு வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.4 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, கொள்ளையர்களைப் பிடிக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களை மீட்கவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் ரூ.4 கோடி வெள்ளிப் பொருட்கள் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் ரூ.4 கோடி மதிப்பிலான 550 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெள்ளிப் பட்டறையில் 550 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்ட ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




