உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

செங்கோட்டை அருகே இரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு - வனத்துறையினர் தீவிர விசாரணை

செங்கோட்டை அருகே பாலருவி எக்ஸ்பிரஸ் இரயிலில் அடிபட்டு புலி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி, பாலருவி எக்ஸ்பிரஸ் இரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
செங்கோட்டை அருகே இரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு - வனத்துறையினர் தீவிர விசாரணை

செங்கோட்டை அருகே இரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு - வனத்துறையினர் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி இன்று அதிகாலை சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் இரயில், செங்கோட்டை – பகவதிபுரம் இரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது தண்டவாளத்தை கடந்த புலி மீது மோதியுள்ளது. இதில் புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இது குறித்து இரயில் ஓட்டுநர் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே பாதுகாப்புப் படையினர், தென்காசி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகனும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், விசாரணையில், ஊருக்கு அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் இருந்து புலி தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், ஊருக்கு அருகிலேயே புலி நடமாடியதும், இரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50