கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக்கறைகளை அழித்துவிட்டு, இரவு நேரத்தில் அவரது உடலை வாகனத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளார். இது குறித்து கிராம உதவியாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது தந்தையைத் தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக் கொன்று உடலை எரித்த கணவர்
சிதம்பரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர், உடலை சுடுகாட்டில் எரித்துள்ளார்.
சிதம்பரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர், உடலை சுடுகாட்டில் எரித்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




