உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.71 லட்சம் பண மோசடி - இளைஞர் கைது

களியக்காவிளை அருகே, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சத்து 71 ஆயிரம் பண மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சத்து 71 ஆயிரம் பண மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.71 லட்சம் பண மோசடி - இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ். இவர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல விரும்பியுள்ளார். அப்போது, கருங்கல் தெருவுக்கடையைச் சேர்ந்த விஜய்ராஜ், சிங்கப்பூரில் வேலை மற்றும் விசா வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய நிதிஷ், இரண்டு தவணைகளாக கூகுள் பே மூலம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 71 ஆயிரம் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதுடன், போலி விசா அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிதிஷ் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது விஜய்ராஜ் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, நிதிஷ் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, விஜய்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50