உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டில் 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டில் 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றார். இந்நிலையில், நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வெங்கடேசன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது வெங்கடேசனுக்கு தெரிய வந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50