உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்ட வழிப்பறி வழக்கு கைதி ராகவன், போலீசார் விலங்கை அகற்றியபோது திடீரென தப்பியோடினார்

கோவை அன்னூரைச் சேர்ந்த ராகவன் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது போலீசார் விலங்கை அகற்றிய நேரத்தில் தப்பியோடினார். அவரைப் பிடிக்க பந்தயச்சாலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவரை சிறையில் அடைப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். கோவை மத்திய சிறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராகவனை முதல் நுழைவு வாயிலில் இருந்து இரண்டாவது நுழைவு வாயிலுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவரது கையில் போடப்பட்டிருந்த விலங்கை போலீசார் அகற்றினர். அந்த நேரத்தில் திடீரென ராகவன் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தப்பியோடிய கைதியை விரைவாகப் பிடிப்பதற்காக பந்தயச்சாலை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறை வளாகத்திலேயே கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50