சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், கார்த்திகை தீபம் தொடர்பாக சர்ச்சை ஏதும் இல்லை என்றும், வழக்கம்போல் மக்களுடன் இணைந்து கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம் என்றும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரட்டும் என்றும், அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அமைச்சர், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்காக ஒரு கூட்டம் செயல்படுவதாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து, கோயில்களில் நல்ல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதை எதிர்க்கும் ஒரு தரப்பினர் இருப்பதாகவும், கோயிலை வைத்து அரசியல் செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், இது போன்ற அரசியலை தமிழக மக்கள் மதிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.மேலும், கோயில்களில் ஏதேனும் நடவடிக்கையால் பக்தர்களுக்கு பாதிப்பு அல்லது சிரமம் ஏற்பட்டால், கோயில் நிர்வாகங்களே தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்வதுதான் அரசின் பணி. அதைத் தான் நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறிய அமைச்சர், வரவிருக்கும் இடைத்தேர்தலை எதிர்கொண்டு வெற்றிக்காக கடுமையாக உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் அனைத்து மதங்களையும், அனைத்து கடவுள்களையும் மதிப்பவர் என்றும், அவர் அனைவருக்குமான தலைவர் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார். எம்மதமும் சம்மதம் என்பதைக் கடந்து, எம்மதமும் நம்மதம் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோயிலை வைத்து அரசியல் செய்யும் ஒரு கூட்டம் உள்ளது - அமைச்சர் ரமேஷ்
கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.
கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கும்பல் கோயிலை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Visil Administrator
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
