உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கேரள அரசு ரூ.8.64-க்கு மின்சாரம் வாங்குவதாக ஸ்டாலின் சொல்வது பொய் – அமைச்சர் நிர்மல் குமார்

கேரளா ரூ.8.64-க்கு மின்சாரம் வாங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய் என அமைச்சர் நிர்மல் குமார் மறுத்து, தமிழகத்தில் ஊழல் இல்லை என்றார்.

கேரளா மின்சாரக் கொள்முதல் குறித்து ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை அமைச்சர் நிர்மல் குமார் மறுத்தார். தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கேரள அரசு ரூ.8.64-க்கு மின்சாரம் வாங்குவதாக ஸ்டாலின் சொல்வது பொய் – அமைச்சர் நிர்மல் குமார்

கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8.64-க்கு வாங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கேரள அரசு ரூ.8.64-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதாகக் கூறுவது தவறான தகவல் என்றும், இந்தக் குற்றச்சாட்டுக்கு கேரள அரசு தரப்பிலேயே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவே குறுகிய காலத் தேவையைப் பூர்த்தி செய்ய கேஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது தவிர்க்க முடியாத நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், மின்சாரக் கொள்முதலில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் மின்சாரத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளைச் சுட்டிக்காட்டியும் அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50