கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையான கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தலையில் பச்சை துண்டு அணிந்து சாலையில் அமர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.தேர்தல் கால வாக்குறுதியாக 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினர். மேலும், எல் நினோ பாதிப்பு மற்றும் போதிய பருவமழை இல்லாததால் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கடன் சுமையில் தவித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையான பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரியில் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
கிருஷ்ணகிரியில் முழுமையான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் பச்சை துண்டு அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் பச்சை துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




