உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கார்த்திகை தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி

திண்டுக்கல்லில் கார்த்திகை தீபம் ஏற்றிய போது புடவையில் தீப்பற்றி, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீனாட்சி உடல் கருகி உயிரிழந்தார்.

திண்டுக்கல்லில் கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டில் தனியாக விளக்கேற்றிய மூதாட்டி மீனாட்சியின் புடவையில் தீப்பற்றியது. இதில் உடல் கருகி உயிரிழந்தார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கார்த்திகை தீபம் ஏற்றியபோது புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி

திண்டுக்கல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி மீனாட்சி. இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் மீனாட்சி மட்டும் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டில் மீனாட்சி விளக்கேற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த புடவையில் தீப்பற்றியது. வீட்டில் வேறு யாரும் உடனில்லாததால், தீயை அணைக்கவோ, உதவிக்கு யாரையும் அழைக்கவோ முடியாமல் தவித்துள்ளார். இதில் தீ மளமளவென பரவி மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை வழக்கம் போல் வீட்டிற்கு வேலைக்கு வந்த பணிப்பெண், மீனாட்சி உடல் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கும், சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50