மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, நேற்று மாலை வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் மற்றும் முருக பக்தர்கள் மலைத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மலை மீது ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் - 300 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
