உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காதலியை 3-வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற வாலிபர் கைது

பெங்களூருவில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை லாட்ஜின் 3-வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக காதலன் சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் காதலியை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், அவரை லாட்ஜின் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிய காதலன் கைது செய்யப்பட்டார். இதில் படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
காதலியை 3-வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய அப்பிகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 19-ந் தேதி இருவரும் அப்பிகெரே பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கினர். அப்போது ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சந்தோஷிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்தோஷ், லாட்ஜ் அறையின் ஜன்னல் வழியாக ஐஸ்வர்யாவை கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து கங்கமனகுடி போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து காதலியை கொலை செய்த சந்தோஷை கங்கமனகுடி போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50