உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காதலியை கொன்று இளைஞரும் தற்கொலை

காதலியைக் கொலை செய்துவிட்டு, லாரியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓசூர் அருகே காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தவிஜா ஸ்ரீயைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் பிரதீப், லாரியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
காதலியை கொன்று இளைஞரும் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தவிஜா ஸ்ரீ. இவர் ஓசூரில் உள்ள தனியார் கடிகாரத் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவரது காதலரான பிரதீப், பாகலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பிரதீப், தவிஜா ஸ்ரீயின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, ஓசூர்-பாகலூர் சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் பாய்ந்து பிரதீப் தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார், தவிஜா ஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50