திருப்பூர் மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் கொடுவாய் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று வீட்டின் அருகே ஸ்ரீஹரி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஸ்ரீஹரியின் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை மீட்டு, உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஸ்ரீஹரி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்தனர். பின்னர், மாணவரை வெட்டிக் கொலை செய்த நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவன் அரிவாளால் வெட்டிக் கொலை
கல்லூரி மாணவர், மர்ம நபரால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் வீட்டின் அருகே நடந்து சென்ற கல்லூரி மாணவர், மர்ம நபரால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




