உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி கிறிஸ்டோபரை கேரளாவில் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி கிறிஸ்டோபரை கேரளாவில் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய பொறுப்பாளர் கிறிஸ்டோபர். இவர் குலசேகரம் பகுதியில் உள்ள கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்ப பேருந்துக்காக மழையில் காத்திருந்த இரண்டு மாணவிகளுக்கு தனது காரில் லிப்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து, ஒரு மாணவியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மற்றொரு மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில் காரை நிறுத்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு காரில் இருந்து குதிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அவரை நடுவழியில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீசார் தேடுவதை அறிந்த கிறிஸ்டோபர் கேரள மாநிலத்திற்கு தப்பிச் சென்று தலைமறைவானார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கிறிஸ்டோபரை கைது செய்தனர். பின்னர், குற்றச்சாட்டுக்கு உள்ளான கிறிஸ்டோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50