தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரையை சேர்ந்தவர் ஓய்வு ஆசிரியர் அன்புநாதன். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என அறிமுகம் செய்தனர். இதையடுத்து, டி.பி.எஸ்., வங்கி, ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர்களுடன் சேர்ந்து அன்புநாதன் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 லட்சம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். அதனை நம்பிய அன்புநாதன், மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் செலுத்தினார். இதையடுத்து, அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டதால் அன்புநாதன் நகைகளை அடகு வைத்தும், கடன் பெற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.58.50 லட்சத்தை மர்மநபர் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தினார். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்புநாதன் தேனி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மோசடியில் ஈடுபட்டதாக திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா, கேரளா மலப்புரத்தை சேர்ந்த சாதுலி சல்மானுல் பரீஸ் அஸ்வின்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் கேரளாவின் மஞ்சப்பேட்டையை சேர்ந்த ரிம்சான், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷகீர் ஆகிய இருவரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, விசாரணையில் இவர்கள் இருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பணம் பறித்தது தெரிய வந்தது.
ஓய்வு ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சம் பண மோசடி - மேலும் இருவர் கைது
தேனியில் ஓய்வு ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் நேற்று மேலும் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரையை சேர்ந்த ஓய்வு ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
