ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தில் ஆஸ்ட்ரால் என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது இந்த தொழிற்சாலையில் பிவிசி மற்றும் சிபிவிசி பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், 8 மணி நேரப் பணிக்கு ரூ.520 ஊதியம் வழங்கப்படும் நிலையில், 4 மணி நேர கூடுதல் பணிக்கும் ரூ.260 மட்டுமே வழங்கப்படுவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கூடுதல் பணிக்கான ஊதியத்தை ரூ.520 ஆக உயர்த்தக் கோரி, இன்று தொழிற்சாலை வாயில் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் அருகே தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்
ஓசூர் அருகே ஆஸ்ட்ரால் தொழிற்சாலையில், கூடுதல் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கக் கோரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே ஆஸ்ட்ரால் தொழிற்சாலையில், கூடுதல் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கக் கோரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




