இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த பைபர் படகை போலீசார் சோதனையிட்டனர். அதில், படகு ஓட்டுநரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்துராஜா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், முகமது கான், முகமது ஆசிக் ஆகியோர் இருந்தனர். அந்த விசாரணையில், தர்ஷன் பிப்ரவரி 26-ஆம் தேதி சுற்றுலா விசாவில் பெங்களூரு விமான நிலையம் வழியாக இந்தியா வந்து, நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தது தெரிய வந்தது. பின்னர், முத்துராஜாவைத் தொடர்பு கொண்ட தர்ஷன், இலங்கையில் இருந்து இருவரை படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு ரூ.1.10 லட்சம் பணம் வழங்குவதாகக் கூறியது தெரிய வந்தது. இதையடுத்து, படகு மூலம் வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர் குறித்து க்யூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தது மற்றும் அதற்கு உதவியது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக படகில் வந்த 3 பேர் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து இருவரை அழைத்து வர ரூ.1.10 லட்சம் பேரம் பேசியதாக விசாரணையில் தெரியவந்தது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




