சென்னை திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி. இவரது மனைவி குப்புலட்சுமி. இவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதையடுத்து, 2ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்கிரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில், கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த குப்புலட்சுமி, அவரைப் பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும், மனைவி உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு உயிரிழப்புகளால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
மனைவி உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் மனைவி உயிரிழந்த தகவலை அறிந்த சில மணி நேரங்களிலேயே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




