தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 18 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜயும் தனது வழக்கமான பாணியில் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இடைத்தேர்தல் வெற்றியை அமைச்சர்களுடன் கொண்டாடிய முதலமைச்சர் விஜய்
இடைத்தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அமைச்சர்கள் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வெற்றியை கொண்டுகின்றனர்.
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் வெற்றியை பனையூரில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தவெகவினர் கொண்டாடினர். இதையடுத்து அமைச்சர்கள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
