மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்த வெற்றி தவெகவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், வாக்காளர்களுக்கு ஒரு பைசாகூட கொடுக்காமல், எந்தவிதமான தேர்தல் பார்முலாவையும் பயன்படுத்தாமல், அன்பு, பாசம் மற்றும் ஜனநாயகத்தை முன்னிறுத்தி இந்த வெற்றி பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகம் ஊழல் சக்திகளின் கோட்டை அல்ல, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தின்போது தங்களை விமர்சித்தவர்களுக்கும், பெண்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியவர்களுக்கும் மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு குடும்பத்தில் ஒருவராக நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி அரசியல் நாகரிகத்திற்கும், தனிமனித நாகரிகத்திற்கும், மக்களாட்சிக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் தேர்தல்களிலும் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என உறுதியளித்துள்ளார்.
அரசியலில் தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




