தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் மெயின் அருவி அருகே 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நிரந்தர ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் குற்றாலம் பேருர்க் கழகச் செயலாளர் எஸ். ஜெய் சாய் குமார், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வத்துறை அமைச்சர் மருத்துவர் அருண் ராஜிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், குற்றாலம் மெயின் அருவி, ஜந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவி அருகே அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், கடந்த ஜூன் 13ஆம் தேதி குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஈரோட்டைச் சேர்ந்த பரிதாள் பீவி என்ற பெண் உயிரிழந்ததுடன், ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, நிரந்தர ஆம்புலன்ஸ் வசதியுடன் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து குற்றால அருவிகளில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகக் குளிப்பதற்குத் தனி இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அருண் ராஜ், குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வசந்த் சேதுபதி உடனிருந்தார்.
ஆம்புலன்ஸ் வசதி கேட்டு அமைச்சர் அருண் ராஜிடம் கோரிக்கை
குற்றாலம் மெயின் அருவியில் 24 மணி நேர ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி குளியல் வசதி ஏற்படுத்தக் கோரி தவெக நிர்வாகி ஜெய் சாய் குமார், அமைச்சர் அருண் ராஜிடம் மனு அளித்தார்
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகே 24 மணி நேரமும் செயல்படும் நிரந்தர ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் குற்றாலம் பேரூர்க் கழகச் செயலாளர் எஸ். ஜெய் சாய் குமார், அமைச்சர் மருத்துவர் அருண் ராஜிடம் மனு அளித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகக் குளிக்கத் தனி இடவசதி ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்ற அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Team - Editorial

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




