உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஆம்னி பேருந்து மோதி காலி மதுபாட்டில் லாரி கவிழ்ந்து விபத்து – 3 பேர் காயம்

வேலூரில் ஆம்னி பஸ் மோதி காலி மதுபாட்டில் லாரி கவிழ்ந்தது. விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் அருகே ஆம்னி பஸ் மோதியதில் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஆம்னி பேருந்து மோதி காலி மதுபாட்டில் லாரி கவிழ்ந்து விபத்து – 3 பேர் காயம்

ஆம்னி பேருந்து மோதி காலி மதுபாட்டில் லாரி கவிழ்ந்து விபத்து – 3 பே
 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 20 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை வேலூர் அலமேலுமங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்ற காலி மதுபாட்டில்கள் ஏற்றிய லாரி மீது ஆம்னி பேருந்து வேகமாக மோதியது.இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. பின்னர், லாரியில் இருந்த காலி மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறின. ஆம்னி பேருந்தும் சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் சென்று நின்றது. இந்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த 20 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50