தமிழக முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திர மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுகிறார். இதற்காக நாளை பிற்பகலில் ஆந்திரா செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சினைகள் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழகத்தின் நீர்வளத் தேவைகள் மற்றும் இரு மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோவிலுக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், தனது ஆந்திரப் பயணத்தை முடித்துக்கொண்டு இரவு சென்னை திரும்ப உள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பயணம் அரசியல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பேச்சுவார்த்தை ஆகிய இரு கோணங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார். தொடர்ந்து, விஜயவாடா கனக துர்கா கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
