ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரின் காரை, பரமக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்றபோது, மாடக்கொட்டான் சந்திப்பு அருகே பேராவூரில் இருந்து சென்ற ஆட்டோ, வலதுபுறம் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சீனி சாதிக் அலி, ரோகித் பிரபு, ஆர்.காவனூர் பிரபாகரன் மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து கார் ஓட்டுநர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்
ராமநாதபுரம் அருகே கார் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் அருகே கார்-ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




