திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், தனது மனைவிக்கு ஆசிரியர் பணி மாறுதல் பெற ரூ.7.70 லட்சம் பணம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதலுக்கு ரூ.7.5 லட்சமும், உள்ளூர் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கு ரூ.3.5 லட்சமும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தலைமை ஆசிரியர் மற்றும் அரியலூர் அலுவலகம் வழியாகப் பணம் கொடுத்ததாகவும் ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையில் பணி மாறுதல் தொடர்பாகப் பணம் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசிரியர் பணி மாறுதலுக்கு பணம் கொடுத்ததாக ஆடியோ வைரல்
ஆசிரியர் பணி மாறுதலுக்கு பணம் கொடுத்ததாக திமுக பிரமுகர் பேசிய ஆடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பணி மாறுதலுக்கு ரூ.7.70 லட்சம் கொடுத்ததாக திமுக பிரமுகர் ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




