அரியலூரில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களை கடைகள் அமைக்க விடாமல் அப்புறப்படுத்துவதாகவும், தள்ளுவண்டிகள் மற்றும் விற்பனைப் பொருட்களை பறிமுதல் செய்வதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, கோட்டாட்சியர் பிரேமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய தீர்வு வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூரில் சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்
அரியலூரில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி, அரியலூரில் சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




