திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் டேங்க் ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபா. நேற்று காலை பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்காகத் தண்ணீர் தொட்டியின் வால்வைத் திறக்கச் சென்றார்.அப்போது, ஊராட்சி அலுவலகத்திற்குச் செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்ததாகக் கூறப்படுகிறது. வால்வைத் திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சுபா கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது கணவர் கணேசன், சுபாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அதிகாரிகள் உடனடியாக வராததைக் கண்டித்து ஆரணி–போளூர் சாலையில் வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்தார்.
மின்சாரம் தாக்கி பெண் பலி - உறவினர்கள் சாலை மறியல்
வடமாதிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வராததைக் கண்டித்து உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வராததைக் கண்டித்து உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




