தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கல்லாறு மற்றும் குன்னம் வட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே, வெள்ளாற்றில் சிக்கித் தவித்த ஆத்தூர் தொழிலாளர்கள் 9 பேரும் கயிறு கட்டி மீட்பு குழுவினர் பாதுகாப்பாக அவர்களை மீட்கப்பட்டனர். மேலும், வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் வெள்ளாற்றில் திடீர் வெள்ளம் - 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆத்தூரைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆத்தூரைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




