உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பெரம்பலூரில் பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் - போலீசார் வலைவீச்சு

குன்னம் அருகே, பேக்கரி கடையை மரக்கட்டையால் அடித்து நொறுக்கிய நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, பேக்கரி கடையை மரக்கட்டையால் அடித்து நொறுக்கிய நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பெரம்பலூரில் பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் - போலீசார்  வலைவீச்சு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கீழப்புலியூரில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் கொண்டு வந்த ரூ. 78 ஆயிரம் பணத்தைத் தவறுதலாகக் கடையிலேயே விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடையைச் சுத்தம் செய்த போது பணத்தைக் கண்டெடுத்த பேக்கரி உரிமையாளர், நேர்மையுடன் அதைக் குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்தப் பணத்தைப் பெற வேண்டிய நபர், பணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், கோபத்தில் மரக்கட்டையால் கடையின் கண்ணாடிக் கதவுகள் மற்றும் பொருட்கள் வைக்கும் காட்சிப் பெட்டிகளை அடித்து நொறுக்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குன்னம் போலீசார், தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
பெரம்பலூரில் பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் - போலீசார் வலைவீச்சு | விசில் மீடியா