உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

புயல் காற்றில் சிக்கி தடுமாறிய விமானம்

புயல் காற்றில் விமானம் ஓடுதளத்தை விட்டு விலகியது. விமானிகள் சாதுர்யமாகச் செயல்பட்டதால் 190 பயணிகள் உயிர் தப்பினர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் புயல் காற்றில் சிக்கிய பயணிகள் விமானம் ஓடுதளத்தை விட்டு புல்வெளிக்குள் சென்றது. விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் 190 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
புயல் காற்றில் சிக்கி தடுமாறிய விமானம்

இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்-2 நிறுவனத்தைச் சேர்ந்த பயணிகள் விமானம் பர்மிங்காம் விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது, பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் தரையிறங்கிய போது காற்றின் வேகத்தால் நிலைதடுமாறியது. இதனால் விமானத்தின் டயர்கள் ஓடுதளத்தில் இருந்து விலகி, அருகில் இருந்த புல்வெளிக்குள் சென்றன. இதைக் கண்ட விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், விமானிகள் மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு விமானத்தை மீண்டும் ஓடுதளத்திற்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தினர். இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 190 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து, பலத்த புயல் காற்றுக்கு மத்தியில் விமானிகள் செயல்பட்ட விதம் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தது. மேலும், இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
புயல் காற்றில் சிக்கி தடுமாறிய விமானம் | விசில் மீடியா