சென்னை பிராட்வேயில் அதிவேகமாக வந்த மாநகரப் பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 11 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி, சாலை மையத்தடுப்பில் ஏறி நின்றது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, தடம் எண் 109A பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராமமூர்த்தி, பேருந்தைத் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 கார்களும் சேதமடைந்தன. அவற்றில் ஆறு கார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக சென்ட்ரல், பாரிமுனை பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த வாகனங்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் போக்குவரத்து சீரானது. நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அடுக்குகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிராட்வேயில் 11 கார்கள் மீது மோதிய மாநகரப் பேருந்து
சென்னை பிராட்வேயில் கட்டுப்பாட்டை இழந்த மாநகரப் பேருந்து, 11 கார்கள் மீது மோதி சாலை மையத்தடுப்பில் ஏறி நின்றது.
சென்னை பிராட்வேயில் கட்டுப்பாட்டை இழந்த மாநகரப் பேருந்து, 11 கார்கள் மீது மோதி சாலை மையத்தடுப்பில் ஏறி நின்றது. இதில் ஆறு கார்கள் கடுமையாகச் சேதமடைந்தன; உயிரிழப்பு ஏதும் இல்லை. விபத்தால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




