உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நீலகிரியில் மண் சரிவு - குளிரில் தவித்த 78 கேரள மாணவிகள் பத்திரமாக மீட்பு

நீலகிரியில் கனமழை மற்றும் மண் சரிவால் சிக்கித் தவித்த 78 பள்ளி மாணவிகள் மற்றும் 8 ஆசிரியைகள் காவல்துறை, தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நீலகிரியில் கனமழை மற்றும் மண் சரிவால் சிக்கித் தவித்த 78 பள்ளி மாணவிகள் மற்றும் 8 ஆசிரியைகள் காவல்துறை, தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடும் குளிரில் தவித்தவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நீலகிரியில் மண் சரிவு -  குளிரில் தவித்த 78 கேரள மாணவிகள் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 78 பள்ளி மாணவிகள் மற்றும் 8 ஆசிரியைகள் சுற்றுலாவை முடித்துவிட்டு நான்கு பேருந்துகளில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அபோது, கல்லாறு பகுதியில் சாலையில் மரங்கள் விழுந்ததால் பேருந்துகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் இரவு 11 மணி முதல் மாணவிகள் கடும் குளிரில் தவித்தனர். இது குறித்து அவசரக் காவல் உதவி 100 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கோவை உட்பட சுற்று வட்டார தீயணைப்பு வீரர்கள் கயிறுகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதற்கிடையே, பர்லியார் பகுதியில் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார்; நடத்துநர் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவிகளுக்குப் பாதுகாப்பான இடத்தில் உணவும் குடிநீரும் வழங்கப்பட்டன. மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
நீலகிரியில் மண் சரிவு - குளிரில் தவித்த 78 கேரள மாணவிகள் பத்திரமாக மீ | விசில் மீடியா