கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் மதுமிதா தனது குழந்தைக்கு பணத்தால் அபிஷேகம் செய்வது, பணக்கட்டுகளுடன் நகைகள் வாங்கச் செல்வது உள்ளிட்ட வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 118 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மதுமிதாவின் யூடியூப் ரசிகார்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். அந்த விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவியதாக முருகன், முருகேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலில் பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளையடித்த மூவர் கைது
நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
