உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தீவுகளாக மாறிய கிராமங்கள் – 3 பேர் பலி

கொடைக்கானலில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொடைக்கானலில் கனமழையால் மண் சரிவு, பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் வீடுகள் சேதமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தீவுகளாக மாறிய கிராமங்கள் – 3 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுக்கம், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன.கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மஞ்சள்பரப்பு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் உருண்டு விழுந்தும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட 13 இடங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மலைக்கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்தும், நீரில் மூழ்கியும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தீவுகளாக மாறிய கிராமங்கள் – 3 பேர் பலி | விசில் மீடியா