நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அளவாய்ப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூப்பெய்தல் நிகழ்ச்சிக்கான சமையல் மற்றும் மேடை அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் சமையல் அறைக்குச் சென்று தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அவர், நள்ளிரவில் மீண்டும் மண்டபத்திற்குள் புகுந்து அங்கும் இங்கும் சுற்றியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்தவர்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்ததால், அவரை அங்கேயே கட்டி வைத்தனர். விசாரணையில், அவர் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண மண்டபத்திற்குள் நள்ளிரவில் புகுந்த இளைஞர் கட்டி வைப்பு
திருமண மண்டபத்திற்குள் நள்ளிரவில் புகுந்து சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்த பணியாளர்கள், கட்டி வைத்தனர்
ராசிபுரம் அருகே அளவாய்ப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்திற்குள் நள்ளிரவில் புகுந்து சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்த பணியாளர்கள், கட்டி வைத்தனர். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




