உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ஓசூரில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பை மதிக்கவில்லை என தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஓசூரில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை எனக் கூறி ஓசூர் நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ஓசூரில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, ஓசூரில் பாஜக வழக்கறிஞர்கள் அணியின் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக வழக்கறிஞர்கள் அணியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் ஆனந்தகுமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50