திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வேடசந்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட நாகஜோதி தலைமையில், கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி வகிதா பானு அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை சிறப்புரையாற்றினர். இதை தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி நதியா, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சுக்கு மகளிர் அணி சார்பில் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தை வெற்றி பெறச் செய்வோம் என மகளிர் அணி நிர்வாகிகள் உறுதியேற்றனர்.
திண்டுக்கல் : திமுக அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சுக்கு தவெக மகளிர் அணி கண்டனம்
திண்டுக்கல் : திமுக அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சுக்கு தவெக மகளிர் அணி கண்டனம் தெரிவித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உறுதி என்று கூறியுள்ளனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற தவெக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், ஆ.ராசாவின் பேச்சுக்கு நிர்வாகி நதியா கண்டனம் தெரிவித்தார். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தவெகவை வெற்றி பெறச் செய்வோம் என நிர்வாகிகள் உறுதியேற்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.



