உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சீர்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி

சீர்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில், வீட்டிற்குள் சிக்கிய நூர்ஜகான் என்ற மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், வீட்டிற்குள் இருந்த நூர்ஜகான் என்ற மூதாட்டி தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சீர்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பகுதியில் நூர்ஜகான் என்ற மூதாட்டி குடிசை வீட்டில் வசித்து வந்தார். அவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் எரியத் தொடங்கியது. இதில் வீட்டிற்குள் இருந்த நூர்ஜகான் தீயில் சிக்கிக் கொண்டார். இந்த தீ விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ வேகமாகப் பரவியதால் அவரை மீட்க முடியவில்லை. இந்த விபத்தில் நூர்ஜகான் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குடிசை வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50