உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சிலுவை விழுந்து கத்தோலிக்க மதகுரு உயிரிழப்பு

ஈக்வடாரில் வழிபாட்டு நிகழ்வின்போது சிலுவை விழுந்ததில், கத்தோலிக்க மதகுரு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடாரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வின்போது சிலுவை விழுந்து ஏற்பட்ட விபத்தில் கத்தோலிக்க மதகுரு பேட்ரிசியோ என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள தேவாலயத்தில் பொதுமக்கள் கலந்துகொண்ட வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டு நிகழ்வில், வழக்கம்போல் கத்தோலிக்க மதகுரு பேட்ரிசியோ கலந்து கொண்டார். அவர் பிரசங்கம் செய்ய தயாரான போது, மதகுரு பேட்ரிசியோக்கு பின்னால் இருந்த சிலுவை, எதிர்பாராத விதமாக மதகுரு பேட்ரிசியோவின் தலை மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மதகுரு பேட்ரிசியோ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவாலயத்தில் பொதுமக்கள் கலந்து கொண்ட வழிபாட்டு நிகழ்வின்போது மதகுரு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மதகுரு பேட்ரிசியோவின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
சிலுவை விழுந்து கத்தோலிக்க மதகுரு உயிரிழப்பு | விசில் மீடியா