சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த முதியவரிடம் 2025-ஆம் ஆண்டு மர்ம நபர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முதியவர், பல தவணைகளாக மொத்தம் ரூ. 62 லட்சத்து 26 ஆயிரம் பணத்தை மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கூறியபடி லாபம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஹைதராபாத் தூத் பவுலி பகுதியைச் சேர்ந்த முகமது தாரிக் அலி மற்றும் அவரது நண்பர் மணீஷ் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முகமது தாரிக் அலி, பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் மோசடி பணத்தைத் தனது வங்கிக் கணக்குகளில் பெற்று அதனை மோசடி கும்பலுக்கு 20 சதவீத கமிஷனுக்கு வழங்கி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.62.26 லட்சம் மோசடி - இருவர் கைது
சென்னையில் பங்குச்சந்தை முதலீடு பெயரில் முதியவரிடம் ரூ.62.26 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி முதியவரிடம் ரூ.62.26 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.


