உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சரக்கு வேன் ஆம்னி பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி

மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்குச் சென்ற ஆம்னி பேருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்குச் சென்ற ஆம்னி பேருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது மோதியது. இதில் கிளீனர் உயிரிழந்தார்; 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சரக்கு வேன் ஆம்னி பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து 46 பயணிகளுடன் சென்னையை நோக்கித் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் வலசைப்பட்டி அருகே பேருந்து சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் கிளீனர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்க உதவினர். 15 ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதே இடத்தில் மேலும் இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் சிலர் காயமடைந்தனர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
சரக்கு வேன் ஆம்னி பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி | விசில் மீடியா