ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள், முதலை நீந்திச் செல்வதைக் கண்டு அலறியடித்து ஓடினர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.முதலை நடமாட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் ஆற்றுக்குச் செல்லாமல் உள்ளனர். கனமழையால் வெள்ளத்தில் முதலை அடித்து வந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதலை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் முதலை நடமாட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள முதலை நடமாட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




